திருமணம் விரைவில் நடைபெற ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை உள்ளது. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை காலையில் முதன் முதலில் அன்று விரதம் இருந்து கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி படம் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். சுத்தமான மஞ்சள் தூள் கொண்டு கஜலட்சுமி படத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும்.
அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும். நாமோ விவஸ்தே பிரும்மன் பாஸ்வதே விஷ்ணு தேஜஸே ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய ஸவித்ரே கர்ம தாயினே ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen