ஓம் நமோ நாரயணா...
பொன்பதி பக்த சிநேகிதர்களுக்கு அன்பு வணக்கங்கள். இனிவரும் பொழுதுகள் எம் பெருமாள் உங்களை ஏந்தும் பொழுதுகளாக உங்கள் அழைப்பினை கேட்டு ஓடி வந்து உங்கள் சுமைகளை சுமக்கும் பொழுதுகளாகட்டும். எம் பொன்னாலை வரதராஜ பெருமாள் தரிசனங்கள்,
எழுந்தருளி கோலங்களை காணவும் பகவான் பெருமைகள் அவன் அற்புதங்களை உணரவும் வழி செய்யுங்கள் அன்பர்களே.
பொன்னாலை நாதன் பற்றி நாங்கள் அறியாததா? இங்கே எதை அறிய என்று எண்ணம்
வேண்டாம் அன்பர்களே. கேட்டலுக்கும் கண்ணால்
காண்பதற்கும் மெய்யுணர்வாய் உணர்வதற்கும் எத்தனை வேறுபாடுகள் உள்ளன. எம் பொன்னாலை வரதன்! ஸ்ரீஸ்ரீனிவாசனின் திகட்டாத அன்பையும் அருளாட்சியையும் மெய்யன்போடு உணர்ந்தவரே அறிவர். உணர்கின்ற அற்புதங்களை சொல்லொணாமல் தவிப்பர்.
அன்பர்களே நானும் சிறு தாசனாய் அவனை உணர்கிறேன் இன்னும் இன்னும் உணர முற்படுகிறேன். "என்பதி அவனே என உணர்கிறேன் அவனின்றி அசைவு பெறேன். என் பதி உறை புண்ணிய
க்ஷேத்திரம் இது... என உணர்கிறேன்" நீவிரும் உணர்வீர் உங்கள் நாதனின் அற்புத தலமிது. அவன் புகழை, நாமங்களை கேட்டாலே மரணபயம் நீங்கும் என்கின்றன
பக்தர்களுக்கு அருள்புரிவார்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen