வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று .14.06.2015,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
23ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவும் 24ஆம் திகதி கைலாச வாகனத்திருவிழாவும் 27 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 28ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 29ஆம் திகதி தீர்த்திருவிழாவும் இடம்பெற்று தீர்த்தத் திருவிழா அன்று மாலை இடம்பெறும் மௌனத் திருவிழாவுடன் மஹோற்சவம் நிறைவடையும் என்று ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளது.
தினமும் காலை 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும் மஹோற்சவ பூசைகள் இடம்பெறவுள்ளது. ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகம், வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து மேற்கொள்கின்றார்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen