வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றம் காண காலை முதல் பக்தர்கள் ஆலயத்தின் உட்புற மண்டபத்தில் கூடத் தொடங்கினார்கள்.
அந்தணர்களின் வேதமந்திர பாராயணம் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோஷம் முழங்க இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றம் இடம்பெற்றது.
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் திரும்பியுள்ள புலம்பெயர் உறவுகளும் கந்தனைத் தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமையில் சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்
. நூற்றுக்கணக்கான அடியார்கள் வயது வேறுபாடுகள் இன்றி அங்கப்பிரதட்ணம் செய்தார்கள்.
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் தொடர்ந்து 25 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. செப்ரெம்பர் 11ஆம் திகதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen