திருக்கடிகை ஸ்ரீயோக நரஸிம்ஹ ஸ்வாமிக்கு மங்களம்
மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்
தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரஸிம்ஹா உமக்கு மங்களம்
வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம்
அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரஸிம்ஹா உனக்கு மங்களம்
வாரணாசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க திருக்கடிகைப் பெருமாளே உமக்கு மங்களம்
வானவரும் மண்ணவரும் போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம்
ஸ்ரீஅம்ருதபல வல்லி நாயகி ஸமதே ஸ்ரீயோக ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்
நரஸிம்மனையும் ஆஞ்சனேயரையும் துதித்து அகமகிழ்வோம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen