உங்கள் அணை வர்க்கும் எமது விஜய தசமி திருநாள்நல் வாழ்த்துக்கள் மக்களால் 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாள்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த 3 நாள்கள், செல்வத்திóன் அதிபதியான லட்சுமி தேவியையும், கடைசி 3 நாள்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள்
பக்தியுடன் வழிபடுவர்.
செய்யும் தொழிலே தெய்வம் எனப் போற்றி தொழில் வளம் பெருகிட மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழில் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறைபொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
பத்தாவது நாளான விஜயதசமி நாளன்று தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றைத் தொடங்குவர். எனவே, வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை
கொண்டாடுவார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை-விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் .வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கூறும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்ககள் .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen