தோஷம் நீங்குவதற்கான சனீஸ்வரர் வழிபாடு

தசரதன் சனிபகவானைப் பார்த்து, "ஆதவன் மைந்தனே! ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தாங்கள் பின்னம் செய்வதால் பனிரெண்டு காலம் நீடிக்கக் கூடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சகாலம் ஏற்படக்கூடாது. அதையே நான் தங்களிடம் முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன்." என்று மீண்டும் கூறினான்.
சனிபகவான், "அதைத்தான் நான் முன்பே கொடுத்து விட்டேன். என்னிடமிருந்து இந்த வரம் பெற்றமையால் உலகம் உள்ள வரை உனது கீர்த்தி நிலைத்திருக்கும். மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வரம் வேண்டும் கேள்" என்றான்.
தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை 
பிரார்த்தித்து பின் சனி பகவானை நோக்கி ஸ்தோத்திரம் பண்ணத் தொடங்கினான்.
நம: கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச
நம: காலாக்னிரூபாய க்ருந்தாய ச வை நம:
நமோ நிர்மாம்ஸ தேகாய தீர்கச்மரு ஜடாய ச
நம: புஸ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம:
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர 
நமோஸ்துதே
நமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக 
நமோஸ்துதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாயச
அதோ த்ருஷ்டே! நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் நிஸிம்த்ரஷாய
 நமோஸ்துதே
தபஸா தக்த தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய சவை நம:
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசிவை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்க்ஷணாத்.
சுபம் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.