ஆயுதத்தின் உண்மையான பயனை, அதனை பயன்படுத்துபவனுக்கு உணர்த்துவதற்காகதான் ஆயுத பூஜை. தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் இறைவன். தொழில் ரீதியாக நாம் பிடிப்பது ஏர்,
மண்வெட்டி, கடப்பாரை, மவுஸ், ஸ்டியரிங் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் நிச்சயம் இறைவன் இருப்பான் இல்லையா? நம்மை வாழ்வில் உயர்த்துவது நாம் அன்றாடம் பணி செய்ய பயன்படுத்தும் கருவிகள்தான்.
அவற்றுக்கு இருக்கும் இறைத்தன்மையை நாம் இந்நாளில் வணங்குகிறோம் என்றும் பொருள் கொள்ளலாம். இதை இன, மத, சாதி ரீதியாக பிரிவுபடுத்தி பார்க்க வேண்டியதில்லை. உலகில் இருக்கும் உழைப்பாளி ஒவ்வொருவனுமே ஆயுத பூஜை கொண்டாட தகுதியானவனாகிறான். தன்னுடைய பணிக்கருவியில் தான் நம்பும் இறைவன் இருக்கிறான் என்கிற எண்ணம் அவனுக்கு உருவானால் அவன் பணி
துல்லியமாகும்
வாழ்க்கை வளமாகும். வீடும், நாடும் சிறப்புறும். ஆயுத பூஜையன்று ஒவ்வொரு உழைப்பாளியும் தான் பயன்படுத்துவது சிறிய பேனாவாக இருந்தாலும் சரி. ஓட்டுவது பெரிய விமானம் என்றாலும் சரி. எல்லாவகை கருவிகளையும், இயந்திரங்களையும் சுத்தமாக துடைத்து வண்ணம் தீட்டி வணங்கி, ஒருநாள் அதற்கு ஓய்வளிப்பது என்பது ஆயுத பூஜையின் சிறப்பு. ‘இந்த கருவிகளை ஆக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்துவேன், அழிவுக்கு எக்காலத்திலும் உபயோகிக்க மாட்டேன்’ என்பதே ஒவ்வொரு ஆயுத பூஜையின் போதும் நாம் எடுக்க
வேண்டிய சபதம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen