யார் உனக்கு துன்பத்தை கொடுத்தாரோ அவர் இன்றைக்கு நிச்சயம் நன்றாக இருப்பதை போன்ற தோற்றம் உனக்கு தெரியும்.. கெட்டதை செய்கிற அனைவரும் நன்றாக இருக்கிறார்கள், நல்லதையே
செய்கிற நான்
கஷ்டபடுகிறேனே என எரிச்சலோ கவலையோ படாதே. அவர்கள் காலையில் பூத்து மாலையில் வாடும் பூவை போன்றவர்கள், இப்போது உள்ள மேன்மையிலிருந்து விரைந்து கீழே தள்ளப்படுவார்கள்.
என் குழந்தாய் நீயோ
விருட்சத்தை போன்றவர். நீ ஆழ வேரூன்றி நிற்பாய்.. அநேகம் பேர் உன்னை ஏமாற்ற வந்தாலும் அயர்ந்து போகாதே.. எத்தனை இழப்புகள் வந்தாலும் சோர்ந்து போகாதே.. நான் ஆழமாக வேர் விட்டிருக்கும் விருட்சம் என்று சொல்லிக்கொள், நீ மலர்களை மட்டுமல்ல, கனிகளையும்
தருவாய்,
அதன்மூலம் வருகிற நன்மை பலருக்கும் பயனாக இருக்கும். நாம் இன்று கஷ்டபடுவதை போலத்தான் நம் எதிரில் இருக்கிறவரும் ஒருநாள் துன்பத்தை அனுபவிக்க போகிறார் என்பது உனக்கு தெரிந்துவிட்டால்
நீ நிச்சயமாக
அவர்கள் மீது கோப படமாட்டாய், அவர்களுக்காக பரிதாபப்படுவாய்.. இன்று நான்.. நாளை நீ என்று சொல்லிக்கொள்வாய். உனக்கு தவறு இழைத்தவரை பார்க்கும்போது இவரும் தண்டனைக்கு தயாராகிறார்
என்பதை தெளிவாக
தெரிந்து அவருக்காக பரிதாபப்படு. இப்படி செய்யும்போது எத்தகைய சூழ்நிலையிலும் நீ பாதிக்கப்படமாட்டாய். ஏனெனில் அப்போது உன் மனதை படிக்கிற நான் நிச்சயம் வெகுமதிகளை அள்ளித் தருவேன்..சீரடி சாய்பாபா வின் குரல் ,,,,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen