சிறுப்பிட்டி மனோன்மணி அம்மன் பக்திப்பாமாலைக்கான முதல்பாடல் எஸ்.ரி.எஸ் கலையகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடவைத்தாய் அம்மா
இசைபோடவைத்தாய் அம்மா
பாமாலை ஒன்று உனக்காக தொடுத்து
பல்லவியோடு சரணமும்தந்து என ஆரம்பிக்கும்
இந்தப்பாடலை எமது ஊரின் கலைஞரான இசைக்கவிஞன் – ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்
இவர் புலம்பெயர் நாட்டில் வாழ்ந்தாலும் எமது ஊரின்மேல் அக்கறையுள்ள கலைஞராகத்திகழ்கிறார். இவர் இதுவரையில் பத்துக்கு மேற்பட்ட இறுவெட்டுக்களை இசையமைத்தது மட்டுமல்ல இவர் யேர்மன் நாட்டில் சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்
எமது ஊர்மேல் கொண்ட பற்றை அக்கறையை புலத்தில் வாழ்ந்தாலும் ஊரின் நினைவுகளை மறக்காமல் எமது மனோன்மணி அம்மனுக்கான பக்திப்பாடலை பாடி அம்மன் ஆலயத்தின் காட்சியோடு
இணைத்து ஒளிப்பதிவாக்கி அம்மன் திருப்பாதத்துக்கு சமர்ப்பணமாக்கியுள்ளதோடு உங்கள் பார்வைக்கும் தந்துள்ளார் என்பது மகிழ்வான செய்தி.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen