புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
கதிர்காமம் உற்சவத்தினை முன்னிட்டு, யால காட்டினூடாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
ஆலய கொடியேற்றல் நிகழ்வு நாளை காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து, பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத தலைவர்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படும்.
இந்நிலையில், கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ரயில் மற்றும் பஸ்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புனிதப் பிரதேசத்தில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
கதர்காமம் ஜூம்ஆப் பள்ளியின் கொடியேற்றம் நாளை மாலை கதிர்காமம் ருஹணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி. குமாரகேயினால் முன்னெக்கப்படவுள்ளது.
இதேவேளை, சட்ட விரோத செயல்கள், வியாபாரம் மற்றும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen