எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் அதாவது தீபாவளி அமாவாசை அடுத்து வரும் ஆரம்பமாகும் வளர்பிறையிலிருந்து வரும் 6-வது திதி கந்த சஷ்டி திதியாகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
முருகப்பொருமானுக்கு உகந்த எண் 6. அவர் ஆறு முகங்களுடன் அவதரித்தார். குழந்தை பருவத்தில் அவரைப் பராமரித்த கார்த்திகை பெண்களின் எண்ணிக்கை 6. தன் ஆட்சிக்குரிய பகுதியாக அவர் தேர்ந்ததெடுத்தது அறுபடை வீடு. சஷ்டி என்பதும் ஆறாம் எண்ணைக் குறிக்கும். இதனால் தான் முருகனின் அருளைப் பெற சஷ்டியில் விரதம் இருக்க வேண்டும் எனபர்.
சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை
விரததின் முதல் தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.
விரத நாட்களில் அதிகாலை எழுந்து காலைகடன் முடித்துவிட்டு கினறு, ஆறு அல்லது குளத்தில் வடதிசை நோக்கி நின்று குளிக்க வேண்டும்.
பின்பு, சுத்தமான ஆடைகளை அணிந்து ஆறுமுகப்பெருமானை நினைத்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.
விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.
இந்த 6 நாட்கள் விரதத்தின் போது, " சரவண பவ " எனும் ஆறெழுத்து மந்திரத்தையும், சஷ்டி கவசத்தையும் படித்து வருவோருக்கு முன் வினைகள் நீங்குவதோடு, இல்லத்தில் ஐஸ்வரியமும், மகிழ்ச்சியும் ஓங்கும் என்பது கந்த புராணம் சொல்லும் செய்தி. மழலை செல்வம் அருளும் விரதங்களில் முதன்மையானது இது என்றும் போற்றப்படுகிறது.
சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen