கிளிநொச்சி வரலாற்று சிறப்புமிக்க இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயிலின் வருடாந்த பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று மிகச்சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது வன்னிப்பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய சித்திரத்தேர் உள்ளதும் மூன்று சித்திரத்தேர்களை உடையதுமான இவ்வாலயத்தின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஒன்பதாம் நாளாகிய இன்று 09.05.2017 செவ்வாய்க்கிழமை அதிகாலை விசேட அபிஷேகத்துடன் ஆரம்பமாகி காலை 08.00 மணிக்கு வசந்தமண்டப பூசையை தொடர்ந்து கனகாம்பிகை அம்பாள் விநாயகர் முருகன் சகிதம் உள்வீதி வலம் வந்து காலை 09.30 மணிக்கு தேரிலே ஆரோகணித்து தொடர்ந்து முத்தேர் பவனி இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்றய தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இவ்வாண்டும் இவ்வாலய பெருந்திருவிழாவுக்கென இலங்கையின் பலபாகங்களில் இருந்ததும் வெளிநாடுகளில் இருந்தும் பல அடியவர்கள் வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை 10.05.2017 தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினத்தன்று அம்பிகையின் புண்ணிய தீர்த்தமான இரணைமடு வாவியில் இடம்பெறவுள்ளதுடன் மாலை மரபு ரீதியிலான வைபவமான இரணைமடு தீர்த்த நீரை அடியவர்கள் தங்கள் கரங்களினால் எடுத்துவந்து அம்பாளின் பாதங்களில் அபிஷேகம் செய்யும் நிகழ்வான கும்ப தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் வளத்துப்பானை களும் ஏனைய பானைகளும் வைத்து பொங்கும் பொங்கல் நிகழ்வும் நடைபெறுவதுடன் அன்றிரவு கொடியிறக்கல் வைபவமும் இடம்பெற்று நாளைமறுதினம் இரவு பூங்காவனத்திரு
விழாவும் இடம்பெறும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen