யாரையும் ஏழரை சனியின் தாக்கம் பாதிப்பதில்லை

சந்திரனின் பன்னிரெண்டு, ஒன்று மற்றும் இரண்டில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் ஏழரை ஆண்டு கால சனி பகவான்.
பன்னிரெண்டில் விரைய சனியாகவும், ஒன்றில் ஜென்ம சனியாகவும், இரண்டில் பாத சனியாகவும் வினை புரிகிறார்.
சனி பகவான் இயற்கை அசுபர் என்பதால், அவரின் பார்வை அவரின் காரகத்துவ வெளிப்பாடே. அவரின் சில முக்கிய காரகத்துவங்கள் கொடுத்துள்ளேன்:
1. சோம்பல், 
2. பிடிவாதம், 
3. மந்தகுணம், 
4. நடுநிலமையான பேச்சு, 
5. துஷ்ட தனம், 
6. கீழ்த்தரமான பேச்சு, 
7. விகார கோபம், 
8. கல்நெஞ்சம், 
9. குழம்பிய எண்ணங்கள்
10. செயல்களை தள்ளிவைத்தல்.
11. பணியாமை
12. தெய்வ பக்தி குறைதல்
சனி பகவான் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கொடுபவராவர். நாம் ஜாதகத்தில், ஐந்தாம் இடம் பூர்வ ஜென்மம் பாவ புணிய பலன்களை காட்டும் இடமாகும். அந்த பூர்வ ஜென்ம இடம் பாதிப்பில்லை என்றாலும், பலமாக இருந்தாலும் சனியின் தாக்கம் குறைவாக அனுப்பவிப்பான். கீழே குறிபிட்டுள்ள படத்தை பார்க்கவும். அப்படத்தில், விரைய சனி, ஜென்ம சனி மற்றும் பாத சனி பார்க்கும் இடங்களை குறிப்பிட்டுளேன்.
விரைய சனியில் சனி பகவான் பார்க்கும் இடங்கள் - 2,6,9
ஜென்ம சனியில் சனி பகவான் பார்க்கும் இடங்கள் - 3,7,10
பாத சனியில் சனி பகவான் பார்க்கும் இடங்கள் - 4,8,11
ஏழரை சனியில் மொத்த பார்வை படும் இடங்கள் - 2,3,4,6,7,8,9,10,11
பார்வை படாத மற்றும் பாதிக்காத அல்லது தொடர்பு கொள்ளாத இடங்கள் முக்கிய இடம் - 5 (பூர்வ புணிய ஸ்தானம்).
எந்த ஒரு மனிதனின் ஜாதகத்தில் பூர்வ புண்யம ஸ்தானம் பலம் பெற்று இருக்கிறதோ, அவர்களை சனி பகவான் கடுமையாக பாதிப்பதில்லை.
இதன் பொருள், பூர்வ புண்யம் பலம் நம்மை சனி பகவான் பார்வையில் இருந்து காக்கும் என்பதாகும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.