உயிருடன் ஜீவ சமாதியானவர்களை கொண்டு வர இயலுமா?

சித்த சித்தாந்த இரகசியப் பதிவு இந்த இரகசியம் கர்ம பலன் பெற்றவரால் மட்டுமே அறிய இயலும் மற்றவர் கண்ணுக்கு புலப்பட்டாலும் மனதில் நிற்காது மறைந்து போம்..
ஜீவ சமாதியானவர்களை உயிருடன் கொண்டு வர இயலுமா?
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் 
கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி
, “லம்பிகா யோகத்தில்” அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து
 விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை
 பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.
பலருக்கும் ஜீவ சமாதி என்பது என்னவென்று தெரியாததால் அதனை ஒரு கோவில் வழிபாடு போலவே பின் பற்றி வருகிறார்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அதே சமயம் இன்று பல போலி ஜீவ சமாதிகள் முளைத்துள்ளன.
ஓம் நமசிவாய
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.