இந்த இராசிகளுக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும்?

♥ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொரு விதமான பணப்புழக்கம், யோகம் என்பன அவரவர் இராசியைப் பொறுத்து அமையும். அதன்படி 12 ராசிகளும், அவற்றின் பணப்புழக்கம் மற்றும் யோகம் பற்றிப் பார்ப்போம்.
#மேஷ ராசி
♥வாழ்க்கையில் முன்னணிக்கு வருவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. நீங்கள் எந்த காரியத்தையும் புத்திசாலித்தனத்துடன் செய்வதால், எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படும்.
#ரிஷப ராசி
♥நீங்கள் பணம் சம்பாதிப்பதில் வல்லவர். பணத்தைக் கடவுளாக நினைப்பவர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்காக நன்கு உழைப்பீர்கள். ஆனால் உங்களிடம் பணம் தங்குவது கடினம். நீங்கள் விரைவில் பணக்காரராக முடியாது.
#மிதுன ராசி
♥உங்களிடம் பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும். அதே சமயம் பணத்திற்குப் பற்றாக்குறையும் ஏற்படாது. பணம் பற்றாக்குறை என்று சொல்லாத அளவிற்கு, உங்களின் பிறப்பு முதல் இறப்பு வரை, உங்களிடம் பணப்புழக்கம் சீராக இருந்து கொண்டே இருக்கும்.
#கடக ராசி
♥உங்களுடைய மனதில் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் பணத்தை சம்பாதிக்கப் பாடுபடுவீர்கள். எவ்வளவு பாடுபட்டு பணத்தைச் சேமித்தாலும், ஒரு சிலவேளைகளில் பணத்தட்டுப்பாடு இருந்து வரும். ஓரளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்.
#சிம்ம ராசி
♥உங்களிடம் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பண வரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவும் இருக்கும். செலவு ஏற்பட்டாலும், அதை நினைத்து கவலை கொள்வீர்கள். நீங்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவீர்கள்.
#கன்னி ராசி
♥பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பீர்கள். நீங்கள் பணத்தினுடைய மகத்துவத்தை நன்றாக புரிந்து கொண்டவர்கள். பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் சேமிக்கும் பணத்தை, மனை வாங்கும் விஷயத்தில் செலவழித்தால் வெற்றி கிடைக்கும்.
#துலாம் ராசி
♥வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க, உங்களுடைய நல்ல குணநலனே காரணம் ஆகும். நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும், அதில் அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.
#விருச்சக ராசி
♥உங்களுடைய ஆசைகள் அனைத்தும் பு ர்த்தியாக, கடின உழைப்பு அவசியம். நீங்கள் செலவை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால், பண வரவு நிச்சயம். பணவரவால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
#தனுசு ராசி
♥உங்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. உங்களது வாழ்நாளில் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு. பணம் இருந்தால்தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்களுக்காகவே செலவழிப்பீர்கள்.
#மகர ராசி
♥உங்களது திறமையால் லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். உங்களது செலவை குறைக்க முடியாது. உங்களுடைய வாழ்நாளில் பாதி நேரம் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே செலவழியும். பண நடமாட்டம் நன்றாக இருக்கும்.
#கும்ப ராசி
♥உங்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கையைவிட, எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். உங்களுக்கு அசையும், அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. எப்போதும் உங்களிடம் பண நடமாட்டம் அதிகம் இருக்கும்.
#மீன ராசி
♥உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். உங்களது சுய முயற்சியாலேயே பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும். உங்களது வாழ்நாள் முழுவதும் 




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.