யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பொங்கல் இன்று நடைபெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமைபெற்று விளங்குவது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயமாகும்.
யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான அடியார்கள்
குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள் வருகைதந்து பொங்கல் செய்து படையல்
செய்தார்கள்.
அடியவர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக காவடி, தூக்குக் காவடிகள் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளன.
பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்றை அறிய முடியாது போயினும் ஆயிரத்தி 750 ஆம் ஆண்டு நாகர் கதிர்காமர் என்பவராக கட்டப்பட்டதாக யாழ் மாவட்ட செயலகத்தின் பதிவுகள் வெளிக்காட்டுகின்றன.
சித்தர்களால் வழிபடப்பெற்ற ஆலயம் பன்றித்தலைச்சி ஆலயம் என வரலாறுகள் கூறுகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen