யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம் [நற்குணம்&மன்சூ ] தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது (வெள்ளிவிழா) திருமண நாள்நிகழ்வு 22.07.2018.அன்று
பசேல் மாநகரில் (basel) (basel) மண்டபத்தில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள் .இவரை அன்பு மகன் அக்கா அத்தான் அண்ணா
தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும்
தம்பதியினர் நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !
தம்பதியினர் இருபத்தி ஐந்து ஆண்டுக்கு
முதல் இணைந்த இணைகள் இவர்கள்
என்று உலகிற்கு அறிவிக்கும்
அற்புதநாள் !
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
உலகமே வியந்து பாராட்டுது நம்மை !
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
ஒருபோதும் வராது சண்டை
வழக்கு ஊடல் !
நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும்
நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும் !
பொறுமை இழந்து கண்டபடி
பேசியதால்
பூமியில் இணைகள் பிரிந்து விடுகின்றனர் !
அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
ஆயும் இருவருக்கும் நீளும் என்பது உண்மை !
மனைவியின் மனதை மதித்து
நடந்தால்
மனையில் இன்பம் பொங்கி வழியும் !
கணவன் மனதை புரிந்து நடந்தால்
கடைசிவரை பிரியாது இணைந்து வாழலாம் !
எங்கிருந்தோ இங்கு வந்த
மனைவியின்
எண்ணம் அறிந்து கணவன் நடக்க வேண்டும் !
ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றி வாழ்ந்தால்
அகமும் புறமும் வாழ்வு அன்பாய்
அமையும் !
எடுத்து எறிந்து மனைவியைப் பேசியதால்
இன்னலில் வாடி வதங்கும் கணவர் உளர் !
கணவனின் குணம் அறிந்து
மனைவியும்
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் இனிக்கும் !
வசமாகும் வானம் மகிழ்வோடு வாழ்ந்தால்
வருடா வருடம் கொண்டாடி மகிழும் திருநாள்
வாழ்க வளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen