கதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு
கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரையில் செல்லும் பாத யாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 6. 45மணியளவில் திறந்து வைக்கப்பட்டதுடன், உகந்தமலை முருகனாலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் தலைமையிலான விசேட பூஜை நிகழ்வுகளும்
நடத்தப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க திபர் க.விமலநாதன் உதவி அரசாங்க அதிபர் கே.உதார லாகுகல, பிரதேச செயலாளர் சந்துருவன், உதவி பிரதேச செயலர் கே.நவநீதன், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நுவன் வெத்தசிங்க, பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி நிசாந்த, இராணுவ பொறுப்பதிகாரி மேஜர்ஜெனரல் எமல்.உம்.முதலிகே உள்ளிட்ட உயரதிகாரிகள் என பலரும்
கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை சீதாராம் குருக்கள் இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,
நீங்கள் இருசுமைகளுடன் செல்கின்றீர்கள். ஒன்று வெளிச்சுமை நீங்கள் தோளிலும் தலையிலும் தூக்கிச்செல்லும் சுமைகள் மற்றது நீங்கள் செய்த கர்மவினைகள்.
இரண்டும் காட்டுப்பாதையில் குறைவடைந்துகொண்டுபோகும். கதிர்காமம் நெருங்கநெருங்க தலையிலுள்ள சுமைகள் குறைவதுபோல் கர்மவினைகளின் சுமைகளும் குறையும். இந்த புனிதபாதயாத்திரை ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்கும்.
காட்டில் பயணிக்கும்போது கொடியமிருகங்கள் பறவைகளிருக்கும் விசஜந்துக்கள் இருக்கும். எனவே பழமரம் நாடி காட்டினுள் உள்ளுக்குள் சென்றுவிடக்கூடாது.
பயபக்தியுடன் முருகனின் சிந்தனையுடன் பயணித்தால் எதுவுமே அணுகாது. சுகமாகச்சென்றுவர ஆசிக்கின்றேன் என
குறிப்பிட்டுள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen