வரலாற்று சிறப்புமிக்க செல்லக் கதிர்காமம் மாணிக்க விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (28) இடம்பெறுகின்றது.
இன்று நடைபெறுகின்ற மகா கும்பாபிஷேகத்திறக்கு பூர்வாங்கமாக கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கலந்துகொள்ளும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் இன, மத பேதங்களைக் கடந்து எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று காலை சுபவேளையில் செல்லக் கதிர்காமம் ஶ்ரீ மாணிக்க விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் பஞ்சதள இராஜ கோபுரத்துடன் புனருத்தாபனம் செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen