உங்கள் வீட்ல இந்த 7 பொருளும் இருந்தா தூக்கி வீசிடுங்க

புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய பின் நாம் செய்யும் ஒரு முக்கியமான செயல், அந்த வீட்டை அலங்கரிப்பது. அழகான சுவர் சித்திரங்களை மாட்டி வீட்டை பார்ப்பதற்கு அழகாக செய்வது நமது 
வழக்கத்தில் ஒன்று.
அப்படி சில அழகு பொருட்களை வைக்கும் போது அவை வீட்டிற்கு எந்த அளவிற்கு நன்மை செய்கிறது என்பதை கவனிக்க நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அந்த சித்திரங்கள் அல்லது பொருட்கள் வீட்டிற்கு எப்படிப்பட்ட அதிர்வைக் கொடுக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அழகின் காரணமாக வீட்டின் அமைதியைக் 
கெடுக்க வேண்டாம்.
கெட்ட சக்தி வீட்டில் இருக்கக்கூடிய ஆற்றலுக்கு நாம் வீட்டில் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் முக்கிய பொறுப்பைப் பெறுகின்றன. பொதுவாக வீட்டிற்கு 
அழகு சேர்க்கும் என்று மக்கள் நம்பும் பொருட்களையே வாங்கி வருகின்றனர். குறிப்பாக சுவரில் மாட்டப்படும் சித்திரங்களை அழகு நோக்கத்தில் மட்டுமே வாங்கி மாட்டும் மக்கள் நம்மில் அதிகமானோர் உள்ளனர். இந்த பதிவில், எவ்வளவு அழகாக இருந்தாலும்,நாம் வீட்டில் மாட்டக் கூடாத சில 
ஓவியங்களைப் பற்றி காணலாம்.
நடராஜர் சிவபெருமான் நடன வடிவில் இருக்கும் ஒரு உருவம் நடராஜர் வடிவமாகும். அது எவ்வளவு அழகான வடிவமாக இருந்தாலும், அந்த கோலம் சிவபெருமானின் கோபத்தின் கோலமாகும். சிவபெருமான் கோபமாக இருக்கும்போது இந்த உருவத்தை எடுத்தார். மேலும் சிவபெருமான் அழிக்கும் செயலை செய்யும்போது நடனமாடியதாக நமது புராணங்களின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் கோபமாக இருக்கும் உருவங்களை நமது வீட்டின் அலங்காரப் பொருளாக பயனப்டுத்தக் கூடாது. அது வீட்டிற்கு நல்லதை அளிக்காது.
கொடூரமான விலங்குகள் வன்முறையுடன் கொடூரமாக காட்சியளிக்கும் விலங்கின் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவை வன்முறையைத் தூண்டுவதாகவே உணரப்படுகின்றன. இத்தகைய வன்முறை நிறைந்த ஓவியங்கள் வீட்டில் விவாதங்கள் மற்றும் தவறான புரிதல்களை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஓவியங்களைக் காண்பவர்களுக்கு கோபத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை இந்த ஓவியங்களில் இருப்பதாக அறியப்படுகிறது.
காட்சிகள் மகாபாரதம் இந்து புராண நூல்களில் மிகவும் புனிதமான நூலாக கருதப்பட்டாலும், இந்த கதையின் காட்சிகள் கொண்ட ஓவியம் அல்லது சித்திரங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இந்த ஓவியங்கள் கூறும் செய்தி நேர்மறையாக இருந்தாலும், அதன் அதிர்வுகள் வீட்டில் பிணக்கு, விவாதம் மற்றும் கோபம் போன்றவற்றை ஊக்குவிப்பதாக அமைகிறது. ஆகவே, இந்த ஓவியங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வீண் விவாதத்தை உண்டாக்குவதாக 
நம்பப்படுகிறது.
மந்திரம் அல்லது போர் மகாபராத ஓவியம் குறித்து கூறியதைப் போல் போர்க்களம் தொடர்பான ஓவியங்களும் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்குவதால் வீட்டில் தொல்லைகள் உண்டாகி அமைதி தொலைகிறது. இத்தகைய ஓவியங்கள் வீட்டில் விவாதத்தை
 உண்டாக்கி அமைதின்மையை உண்டாக்குகிறது. இதே போல், பேய் மற்றும் பூதங்களின் ஓவியங்கள், மந்திர தந்திர ஓவியங்கள் ஆகியவை எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி வீட்டின் அமைதியைக் குலைப்பதால் அவற்றை வீட்டில் 
வைத்திருக்க வேண்டாம்.
ஓடும் நீர் ஓடும் நீர் என்பது ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும். இதனால் ஓடும் நீர் ஒரு அமங்கல காட்சியாக பார்க்கப்படுகிறது. ஆகவே இத்தகைய படங்கள் அல்லது ஓவியங்கள் வீட்டின் நிதி நிலைமையில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் இருக்கும் பணம் வெளியில் ஓடும் என்று இந்த படங்கள் உணர்த்துவதாக 
அறியப்படுகிறது.
மூழ்கும் கப்பல் தொல்லைகள் மற்றும் நடக்கக் கூடாத செயல்கள் நடப்பதை குறிப்பதாக இந்த ஓவியம் அறியப்படுகிறது. எந்த ஒரு எதிர்மறை நிகழ்வுகளும் நடப்பதைக் குறிக்கும் ஓவியங்கள் 
வீட்டின் அமைதிக்கு நன்மை செய்வதில்லை. மூழ்கும் கப்பல் போன்ற ஓவியங்கள் வீட்டின் சந்தோஷத்தை மூழ்க வைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தாஜ் மஹால் தாஜ் மஹால் என்பது ஒரு அழகின் அடையாளம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த இடத்தில் தான் மன்னர் ஷாஜஹான் அவர் மனைவியின் சமாதியை எழுப்பினார். இந்த ஓவியங்கள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும். சமாதிகளின் படங்கள் அல்லது ஓவியங்கள் அமங்கலமாக கருதப்படுகின்றன. அதனால் இதனை 
வீட்டில் வைக்க வேண்டாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.