மேஷ ராசி:
வீர உணர்வு கொண்ட மேஷ ராசிக்காரர்களே, 2019 தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வரும். இருந்தாலும் பிற்பகுதியில் வருமானத்துக்கு குறை இருக்காது. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆனால் விரைவில் குணமாவீர்கள். கடின முயற்சிக்கு பின்பே வெற்றி
கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு அதிகமான வேலைப்பளு இருக்கும். புது வேலை தேடும் நபர்களுக்கும் தடங்கல்களுக்கு பின் நல்ல வேலை அமையும். வெளியூர், வெளிநாடுகளின் வேலைக்கான முயற்சிகள் வெற்றி பெரும். அரசியல், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின் கிடைக்கும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல
வாய்ப்புகள் அமையும்.
பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளைகள் வழியில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். மாணவ – மாணவியர் கல்வியில் அக்கறை செலுத்தினால் சிறக்கலாம்.
ரிஷப ராசி:
எப்போதும் தன்னை அழகாக காட்டிக் கொள்ளும் ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு, சிறந்த ஆண்டாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும்
நிறைவேறும்.
புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். பதவி உயர்வுகள் கிடைக்கும்.
வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் லாபம் ஏற்படும். பணியிடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றங்கள் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். புது வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும் .
மிதுன ராசி:
ஞாபகசக்தி அதிகம் கொண்ட மிதுன ராசிகர்களுக்கு புத்தாண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். பண விஷயத்தில் நம்பியவர்களே மோசம் செய்யக்கூடும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செலவ்து நல்லது. மூன்று மாதம் வரை புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வெளிநாட்டு தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் உண்டாகும்.
பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை, பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சில காலம் மந்த நிலையை அடைந்தாலும், பின் சிறப்பார்கள்.
கடக ராசி:
மற்றவரின் மனநிலையை கச்சிதமாக கணிக்கும் கடக ராசிகாரர்களுக்கு, இந்தாண்டு, நற்பலன்கள் அதிகமமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரிகளுக்கு செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பணிகளில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம்,
பதவி உயர்வு கிடைக்கும்.
மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பணியிடங்களில் சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு கேட்ட விலை கிடைக்கும். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசி:
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் உள்ள, சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சம பலன்கள் ஏற்படும். சுக வாழ்வில் பாதிப்புகள் உண்டாகும். சுப காரியங்கள் தாமதத்திற்கு பின் வெற்றியடையும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. வியாபாரங்களில் கூட்டாளியை அனுசரித்து செல்வது நல்லது.
சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் உண்டு. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
கன்னி ராசி:
இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு, இந்த ஆண்டில் சில காலம் மிக கடின முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் சமாளிக்கும் திறன் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற
இறக்கமான நிலை இருக்கும்.
உங்களின் பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயற்சிப்பார்கள் என்றாலும், உங்களுக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவிகளை காப்பாற்ற கடுமையாக உழைக்க வேண்டும். விவசாயிகள் சுமாரான லாபம் தான் கிடைக்கும். கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
துலாம் ராசி:
கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசியினருக்கு, இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். பிரச்சனைகளும் தீரும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். தொழிலில் நல்ல
லாபம் ஏற்படும்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாய கடன்களை அடைக்க கூடிய பொருளாதார நிலை உயரும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். ஆபரணம்,
ஆடை சேர்க்கை ஏற்படும்.
விருச்சிக ராசி:
மனதில் பட்டதை பேசும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் தாமதமாகவே கிடைக்கும். கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை
பெற முடியாது.
உத்தியோகங்களில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாக கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவரகள் பேச்சில் கவமுடன் இல்லை என்றால், சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் சிறக்க முடியும்.
தனுசு ராசி:
பிறருக்கு உதவும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். தொலை தூர பயணங்களால் அனுகூலமாக
இருக்கும்.
உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மாணவர்கள் தீய சிந்தனைகளை தவிர்த்து கவனம் செலுத்துவது அவசியமாகும்.
மகர ராசி:
மற்றவர்களுடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சேருவார்கள். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பணியில் இருப்பவர்களுக்கு புதிய இடங்களுக்கு மாறுதல்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும்.
கும்ப ராசி:
மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் துவக்க மாதங்களில் சங்கடங்கள் இருந்தாலும் பிற காலங்களில் நன்மையாக முடியும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிறரை பெரிய தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காது. கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாள் சிறந்தது. பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீன ராசி:
சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் துவக்கம் சிறப்பாகவே இருக்கும். பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு பணியிட மாறுதல்கள் கிடைக்கும். பதவி உயர்வுகளும் உண்டாகும்.
உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கட்சிகளில் உயர் பதவிகள் கிடைக்கும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen