“ஓம் த்ரயம்பகம் யஜமஹி
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முஷிய மம்ருடட்”
* முதலாம் காலப் பூஜை நேரம்
மாலை 6.31 முதல் 9.37வரை
* இரண்டாம் காலப் பூஜை நேரம்
இரவு 9.37 முதல் 12.43 வரை
* மூன்றாம் காலப் பூஜை நேரம்
12.43 முதல் 3.48 வரை
* நான்காம் காலப் பூஜை நேரம்
அதிகாலை 3.48 முதல் 6.54 வரை
மகாசிவராத்திரியின் நான்கு காலப் பூஜைக்கு முன்பாக நடராஜப் பெருமானையும் பிரதோஷ நாயகனான நந்தியெம்பெருமானையும் வழிபட வேண்டும்.
முதலாம் காலப் பூஜையில் சோமாஸ்கந்தரையும்,
இரண்டாம் காலப் பூஜையில் தென்முகக் கடவுளான தட்சணாமூர்த்தியையும்,
மூன்றாம் காலப் பூஜையில் லிங்கோத்பவரையும்,நான்காம் காலப் பூஜையில் ரிஷபாரூடமூர்த்தியையும் (சந்திரசேகர்
)வழிபட வேண்டும்.
நான்கு காலப் பூஜைகளில் இரவு 11.30 முதல் 1மணி வரையிலான சிவ பூஜையே சிறப்பு வாய்ந்தது.
வீட்டில் பூஜை செய்பவர்கள் பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய ,சிவாயநம வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருப்பது
நற் பலனைத் தரும்.
கண்விழித்திருக்கும் சிவ பக்தர்கள் சிவபுராணம்,திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவமகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களை படிப்பது புண்ணியம் தரும்.
ஆலயங்களுக்குச் செல்வோர் பால், தயிர், நெய்,தேன் போன்ற பூஜைப் பொருட்களைக் கொடுத்து வழிபடலாம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen