நரசிம்மருக்கு சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.நரசிம்மர் விரத வழிபாட்டு பலன்கள்:
நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். ஜாதகத்தில் இராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.ஸ்ரீவைஷ்ணவ ஜோதிட
சம்பிரதாயத்தில்
ஞானகாரகன் கேதுவுக்கு அதிதேவதையே நரசிம்மர்தான். பில்லி, சூன்யம், ஏவல், ஆபிசாரம் போன்ற மனிதர்களின் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும் நேர்முகமான எதிரிகளால்
வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் நிவர்த்தி செய்வது கொள்ள முடியும்.சுவாதி
நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன்
ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.நரசிம்ம மூர்த்தியை
தியானிப்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெற்றி கொள்ளும் திறன் பெறுவார். நரசிம்ம மூர்த்தியை உபாசனா
தெய்வமாகக் கொள்பவர் அஷ்டதிக்குகளிலும் புகழ்பெற்று விளங்குவர்.துலா ராசியில் சூரியன்
சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்றுதான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. எனவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் தடைகள், பிரச்சினைகள் நீங்கி
நன்மை உண்டாகும்.
![]()



0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen