அத்திவரதர்..காஞ்சியில்40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர்... காஞ்சியில் கோலாகல ஏற்பாடுகள்!
காஞ்சி மாநகரமே ஒரு பெருந்திருவிழாவுக்காகத் தன்னைப் பல வகைகளிலும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆம். கோயில்கள் சூழ்ந்த காஞ்சியில் எண்ணற்ற திருவிழாக்கள்
 கொண்டாடப்பட்டாலும், அவற்றையெல்லாம்விடப் பல வகைகளிலும் சிறப்புகள் கொண்ட ஒரு விழா அது. அதுவும் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்றால் ஏற்பாடுகளுக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவா வேண்டும்?!
40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே தரிசிக்கக் கிடைக்கும் அத்திவரதரின் தரிசனம்தான் அது! வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தரப்போகும் அந்த அற்புதத் திருவிழாவை காஞ்சி மக்கள் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் பக்தர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
காஞ்சியின் பல்வேறு சிறப்புகளில் ஒன்று வரதராஜ பெருமாள் கோயில். திருக்கச்சி, அத்திகிரி என்று பெருமையுடன் அழைக்கப்படும் தலம் இது. கோயிலில் மூலவர் தேவராஜ பெருமாளும் பெருந்தேவி தாயாரும் அருள்புரிகிறார்கள். பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அளிப்பவராகையால் இந்தப் பெருமாள், `
வரதர்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது, கோயில் கருவறையில் வழிபடப்படும் தேவராஜ பெருமாள் ஆதிமூலவர் கிடையாது. இந்தத் தலத்தின் ஆதி மூலவராக இருந்த அத்திவரதர், அனந்தசரஸ் என்ற கோயில் தீர்த்தக் குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தினடியில், வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் உள்ளார். 
நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவார். முதல் 24 நாள்கள் சயனக் கோலத்திலும் அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருவார். கடைசியாக, 1979-ம் ஆண்டு
 ஜூலை 2-ம் தேதி எழுந்தருளிய அத்திவரதர் இந்த ஆண்டு ஜூலை-1 ம் தேதி எழுந்தருளுகிறார். 
ஆதி அத்திவரதர் கோயிலுக்குள் மூழ்கியிருப்பது குறித்து பல்வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. ஒருமுறை சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் காட்சி தந்தார். அந்தக் காட்சியைக் கண்ட பிரம்மதேவன், பெருமாளின் 
திருவடிவத்தை மிகப்பெரிய அத்திமரத்தில் வடித்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மதேவன் வழிபட்ட மூர்த்தம்தான் அத்திவரதர். இந்த அத்திவரதரை இந்திரனின் தேவலோக யானையான
 ஐராவதம் சுமந்துவந்து மண்ணுலகில் நிலைநிறுத்திவிட்டு அத்திகிரி, வேழமலை எனும் பெயரில் குன்றாகிப்போனது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும், தேவர்களுக்கும் வேண்டிய வரங்களை அப்படியே அளித்ததால் அவர் `வரதர்
' என்று போற்றப்பட்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.