கிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரத
ம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும்.இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும்
பூஜைகள் செய்து
வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும்.கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை
பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றைப் படை
த்து அவரை வழிபடுவது சிறப்பானது.அதன்பின்னர் விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.குழந்தைப் பாக்கியம்
இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்கியம் மிக்க சத்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால்
கிருஷ்ணன் அருள்வார்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen