குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். மேலும், எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும்.குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்துவிட்டால் போதும், தானாக பலம் கிடைத்து விடும்.குருபகவான் ஆண்டுக்கு
ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.விகாரி வருடம் வாக்கிய
பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) திகதியின்
பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில்
அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதியன்று
பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.அந்த வகையில் 2019-2020ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சியில் தொழிலில் முன்னேற்றம்
காணக்கூடிய ராசிக்காரர்கள் :
மேஷம்,மிதுனம்,கடகம்,சிம்மம், கன்னி,விருச்சகம் மற்றும் கும்பம் குருபகவான் அவர் நின்ற வீட்டை காட்டிலும் அவர் பார்க்கும் வீட்டிற்கு அதிக சுப பலன்களை அளிக்கக்கூடியவர். குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண சுப பலன்களை பெறும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen