இன்று27.10.2019. தீபத்திருநாளாம் இணைய வாசகர் அனைவர்க்கும் தங்களின் உறவினர்களுக்கும்
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத்
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே
பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே
கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே ……….
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே ……
ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே …..
பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும்
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும்
நிலைக்கட்டுமே .
நவற்கிரி .கொம்
நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நவற்கிரி .கொம்
நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen