சிம்மம்: 05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக மேம்பாட்டையும். சிறு சிறு உபாதைகளும் அறவே மறைந்து தெளிவாகக் காணப்படுவீர்கள். அனைத்து விஷயங்களும் நீங்கள் எதிர்பார்த்தது போலவே நடக்கும். செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரம் உயர்ந்து
காணப்படும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள்.பங்காளிகளுடன் சுமுக உறவு உண்டாகி பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கிடைத்துவிடும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சமாதானப் போக்கைக் கடைபிடிப்பார்கள். அவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்குவீர்கள். அரசாங்க
உதவிகளைப் பெறுவதற்கு ஏற்ற காலமாக இது அமைகிறது. நீண்ட காலமாக தள்ளிக்கொண்டே சென்ற தீர்த்த யாத்திரைகளை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். மறைமுக நேர்முக
எதிர்ப்புகள் அனைத்தும் செயலற்றதாகிவிடும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடந்தேறும். பெற்றோர் வழியில் இருந்த உடலுபாதைகள் தீர்ந்து மருத்துவச் செலவுகளும் குறையும்.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்று சேர்வார்கள். முன்போன்ற எதிரும் புதிருமான முரண்பாடு குடும்பத்தில் இராது. பழைய தொழிலை சிரமப்பட்டு மறுபடியும் நடத்தத் தொடங்குவீர்கள். பணமுடை என்று பெரிதாக
இல்லாவிட்டாலும் சிறிது கடன் வாங்கி செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் பழைய அனுபவங்கள் இந்த காலத்தில் கைகொடுக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்திலும் ஓரளவு மறைமுக
எதிர்ப்புகள் இருக்கும். ஆலய திருப்பணிகளுக்கான முன்னோடி திட்டங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அரசாங்க உதவிகளும் கைதூக்கி விடுவதாக அமையும். நெருங்கிய நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அனாவசிய
நெருக்கமும் கூடாது
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் சிறப்பாக நடக்கும். பரபரப்பாக காணப்படுவீர்கள். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள். மறைமுகப் போட்டியாளர்கள் தானாகவே விலகி விடுவார்கள். அசையும் அசையாச் சொத்து ஆகியவைகளை வாங்குவீர்கள். இதுவரை
செய்யாதிருந்த முயற்சிகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்துகளின் மூலம் குறைவின்றி வருவாய்ப் பெருக்கம் வரத் தொடங்கும். சிலர் கடல் கடந்து சென்று வரும் யோகத்தையும் பெறும் காலகட்டமிது
என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவார்கள். விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலைகளைத் திட்டமிட்டதுபோல் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சுற்றுலா சென்று
வரும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சி துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே முடியும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். அலைச்சல் திரிச்சல் எதுவும் இல்லாமல் சுலபமாக வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். பழைய நிலங்களை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தில் புதிய நிருக்குலத்தை
வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். அரசு அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். செயல்களை நன்றாக யோசித்து கட்சி வேலைகளை நிதானத்துடனும் தொண்டர்களின் ஆதரவுடனும் செய்தால்தான் முடிவு விருப்பப்படி அமையும். புதிய யுக்தியுடன் பணியாற்றுவார்கள்.கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடத்தொடங்கும். திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்.
பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து அனைத்துக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளவும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் பாடங்களைப் புத்துணர்ச்சியுடன் படிக்கவும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எந்த முடக்கமுமின்றி சீராக நடக்கத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். முன்போல
பட்டதும் படாததுமாகப் பேசி வந்த நிலை இப்பொழுது இருக்காது. வெல்லும் சொல்லும், வாக்கு பலிதம் போன்ற எல்லாம் கணீரென்று உங்கள் வாயிலிருந்து வந்து விழும். நாணயம் சிறந்து விளங்கும்.
செல்வாக்கு சொல்வாக்காக
மாறும். கடனில் செய்து கொண்டிருந்த செய்தொழில் கைமேல் பணம் என்ற முறையில் நடக்கும். புதிதான அனுபவங்கள் பல முனையிலிருந்தும் உண்டாகும். திருமணம் பலமுறை தட்டிச் சென்றவர்களுக்கு அவசரத் திருமணமாகக் கூடிவரும். வேலை இல்லை என்று சோம்பிக்கிடந்தவர்களுக்கு நேரம் போதவில்லை என்கிற அளவுக்கு
வேலை வரத் தொடங்கும்.
அசையாச் சொத்து விஷயத்தில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்களும் இழப்பும் இனி தொடராது. இல்லத்திற்குக் தேவையான நவீன ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து உயர்ந்து
காணப்படும் காலகட்டமிது.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் ஓர் உயர்நிலையை எட்டுவீர்கள். பாராட்டும் பணவரவும் பலவழிகளிலிருந்து வந்தவண்ணமாகவே இருக்கும். செயற்கரிய சாதனைகளில் இறங்கி முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். பத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்றதெல்லாம்பழுதில்லை என்கிற நிலைமை ஏற்படும். தற்காலிகமாகச் செய்து வந்த காரியங்களை நிரந்தரமாக்கி விடுவீர்கள். குடும்பத்தினர் அனைவருக்கும் இருந்த நோய்நொடிகள் முழுமையாகக் குணமாகிவிடும். வழக்குகளில் சிக்கித் தவித்தவர்கள் தெய்வனுகூலத்தினால் விதிவிலக்கு கிடைக்கப்பெற்று முழுமையாக
விடுபட்டுவிடுவார்கள்.
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்பாளர்களிடமிருந்து வெகு சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். கைவிட்டுப்போன வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும். உடன்பிறந்தோரின் பாசத்தினால் திக்குமுக்காடிப் போவீர்கள்.
வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்ப கைவந்து சேரும். குழந்தைகளின் வகையில் கடமைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதால் தலைச்சுமை இறங்கிவிட்டது போன்ற
உணர்வைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க அடித்தளமிடுவீர்கள். குடும்பத்துடன் தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். கடந்தகால இழப்புகளை சரிகட்டும் காலமாக இது அமைகிறது
என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பளு குறையும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே செயல்பட்டால்தான் பயிற்சிகளைத் தவிர்க்கலாம். இந்த காலகட்டத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வும் இந்த குருபெயர்ச்சியில்
உங்களைத் தேடி வரும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளையும் புகுத்துவீர்கள். வண்டி வாகனங்களுக்குச் சிறிது பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். விவசாயிகள் விளைச்சலில் இந்த சிக்கல்கள் மறைந்து மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே முடியும். சிலருக்கு வழக்குகளில் மன உளைச்சல் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் புதிய பூமி
வாங்கும் யோகம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை வராது என்றாலும் கவனமாக இருக்கவும். பேசும் நேரத்தில் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக பேசவும். கலைத்துறையினருக்கு திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்கள் கைநழுவிப்போன வாய்ப்புகள்
மீண்டும் தேடி வரும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். தடைபட்ட திருமணம் சிறப்பாக நடந்தேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். கணவரிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவமணிகள் தன்னம்பிக்கையை கூட்டிக் கொண்டு செயலாற்றும் காலகட்டமாக இது அமையும்.
பரிகாரம்: திருவேங்கடமுடையானை வழிபட்டு வரவும்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள
காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு உங்களாலான உதவிகள் செய்வீர்கள். செய்தொழிலில் புதிய பிரச்னை என்று எதுவும் ஏற்படாது. எடுத்த காரியங்களை விடாபிடியாக பிடித்து அதிக முயற்சி செய்து வெற்றி பெற்று விடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பணத்தட்டுப்பாடு வருவதற்கு இடம் இல்லை. சோம்பல் அறவே நீங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள்.
முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்படையும். குழந்தை இல்லை என்று எண்ணி நீண்ட காலமாக சாந்தி பரிகாரம் செய்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புத்திரப்பேறு ஏற்படக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாயத்தில் கௌரவம், அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் முழுமையான பயிற்சி, ஈடுபாட்டைக் காட்டுவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றமும் பதவிகளையும் பெறக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்ப உயர்வு உண்டாகும். பகைமையும் பிரச்னையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். சிலர் வெளிநாடு சென்று வரும்
பாக்கியத்தையும் பெறுவீர்கள்.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் தொழில் வழி வெற்றிகளால் லாபம் அதிகரிக்கும். மற்றவர்களால் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களையும் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். சத்தான ஆகாரங்களை உண்பீர்கள். சிலர் புதிய வண்டி வாகனங்களை வாங்குவார்கள். ஆடம்பரமான வீட்டிற்கும் மாற்றம் செய்வார்கள். உடல்ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நெருங்கிய உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். சிலர் வெளியூர் சென்று புதிய பயிற்சிகளை அறிந்து கொள்வார்கள்.
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் நேர்முக மறைமுக எதிர்ப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்தும் உதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். பெற்றோர் உடன்பிறந்தோர் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த தக்க பயணங்களைச் செய்வீர்கள். புதிய சாதனைகளையும் செய்வீர்கள். குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனைகளையும்
நிறைவேற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும்
வகையில் நடந்து கொள்வீர்கள்.
பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் தங்கள் பொருள்களை புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளை பராமரிப்போருக்கு பால் மற்றும் பால் பொருள்களால் நல்ல
வருமானமும் உண்டாகும்.
அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவார்கள். பொறுப்புகளை சரியாக உணர்ந்து செயல்படுத்துவார்கள். முக்கிய பிரச்னைகளில் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையில் இருக்கும். மாற்றுக் கட்சியினரால் எந்த கௌரவக் குறைச்சலான விஷயங்களும் ஏற்படாது. உங்கள் அந்தஸ்துக்கு குறைவான விஷயங்களில் ஈடுபடுவதைத்
தவிர்க்கவும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவார்கள். வருமானமும் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிறு சிறு நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். கணவரிடம் நிலவி
வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு சீராகும். சிக்கனமாக இருந்து வீண் செலவுகளைத் தவிர்க்கவும். இல்லத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விரும்பியத்துறையில் முன்னேறலாம். விளையாட்டுத் தனத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல்
அனுஷம், கேட்டை முடிய)
05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் முற்றுப்பெறாமல் நீடித்துக் கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் திக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகி விடுவார்கள். மனத்தடுமாற்றங்களும் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு சமூகச் சீர்கேடுகளைக் களைய முயல்வீர்கள். நண்பர்கள் உங்களுடன் தோளோடு தோள் சேர்த்து சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள். தவணை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும் சோதனையும் தீர்ந்து வாழ்க்கை தெளிவாகவும் நேராகவும் நடக்கத் தொடங்கும். பாதகமான கோர்ட் விவகாரங்கள் உங்களுக்குச்
சாதகமாக தீர்ப்பாகும்.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் பழைய தவறுக்ளைத் திருத்திக் கொள்வீர்கள். தீயவர்களின் நட்பை விலக்கி விடுவீர்கள். இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையும் வளரும். செயலில் உறுதி கூடும். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி
பெற்றுவிடுவீர்கள். வயதில் மூத்தவர்களைப் பணிந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மிக தர்மகாரியங்களில் ஈடுபடுபவர்களுடன் நட்பை உண்டாக்கிக் கொள்வீர்கள். மக்களிடையே ஆன்மிக நெறிகளைப் பரப்புவீர்கள். முடங்கிக் கிடந்த காரியங்களைச் செய்து வெற்றியடைவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான
உதவிகளைச் செய்வீர்கள்.
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய மனவலிமையை பெறுவீர்கள். குற்றம் குறையற்று நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் வலம் வரத் தொடங்குவீர்கள். அரசு
வழியில் உங்கள் தொழிலுக்கு உதவிகளும் சலுகைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் சுமுகமான நிலைமை கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சமுகமான பாகப்பிரிவினைகள் நடக்கும்.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில்
நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகத் தீர்ப்பாகி அதன் மூலம் நிம்மதியடைவீர்கள். வருமானத்தையும் பெறுவீர்கள். உங்கள் குறைகளை நேரடியாக ஏற்றுக்கொண்டு உங்கள் செயல்களை மாற்றிக் கொள்வீர்கள்
என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்கவும். சிலருக்கு விரும்பி இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புண்டாகும். இந்த காலகட்டத்தில் வேலைகளை
முறைபடுத்தி செய்யவும்.
வியாபாரிகளுக்கு கூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நடந்து கொள்ளுங்கள். போட்டியாளர்களின் தொல்லைகள் இராது. அவர்களின் தொழில் ரகசியங்களையும் அறிய வாய்ப்புண்டாகும். விவசாயிகளுக்கு முயற்சிகளின் அளவுக்கு ஏற்பவே லாபம் கிடைக்கும். விளைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் இந்த குருபெயர்ச்சியில் அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்பட்டு காரியமாற்றுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். அதோடு
புதிய பொறுப்புகளையும் அளிக்கும்.கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்த பின்னர் செயல்படுத்தவும். உங்கள் செயல்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வேலையில் ஒழுங்கு முறையை கடைபிடிக்கவும். ரசிகர்களின் ஆதரவு தொடரும்.
பெண்மணிகளுக்கு சில நேரங்களில் மனக்குழப்பங்களும் கவலைகளும் உண்டாகலாம். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் முழுமையாக ஈடுபடவும். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்தினால் மேலும் நன்மை அடையலாம்.
பரிகாரம்: பார்வதி தேவியை
வழிபட்டு வரவும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen