வீடு சிறியதாக இருந்தாலும், அதில் சந்தோஷம், நல்ல சிந்தனை, அமைதியான சூழல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை எந்தவித தங்குதடையும் இன்றி சுமூகமாக பயணிக்க முடியும்.
அதற்கு மாறாக வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏ
ற்பட்டால், அந்த வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜோதிட ரீதியாக நேர்மறை சக்திகள் (positive energy) நம் வீட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்
$என்பதைப் பார்ப்போம்.
நேர்மறை சக்திகளை எப்படி வீட்டிற்குள் கொண்டுவருவது? வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே
சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம்.உதாரணமாக.. சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரஹத்தில்
செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில்
துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும்
கலந்திருக்கும்.இவ்வாறு நாம் வசிக்கும்
வீட்டினுள் தினமும் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாகும். தினமும் இதைச் செய்து பாருங்கள் வித்தியாசத்தை
நீங்களே உணர்வீர்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen