பஞ்ச ஈச்சரங்களில் முதன்மைபெற்ற 63 சக்தி பீடங்களைக் கொண்டதுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாத சுவாமி ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவத்தில் 11.03.2020.அன்று மிகச்சிறப்பாக தேர்த் திருவிழா இடம்பெற்றது.
கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான பிரம்மோற்சம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு
வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவ மூர்த்திகள் வாத்தியங்களுடன் உள்வீதி வலம்வந்து
பின்னர் தேரில் அமர்ந்து தேர்த் திருவிழா காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி வெளிவீதி வலம்வந்தது.
இந்த தேர்த் திருவிழாவில் நாட்டின் பல
பாகங்களிலும் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தீர்த்த உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடையவுள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen