மக்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மனை குழு குழுவாக வழிபட அனுமதி

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா  (08-06-2020.) இன்று திங்கட்கிழமை  இடம்பெறுகிறது.கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, ஆலயத்திற்கு பொதுமக்கள் நுழைவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.ஆலய சூழலிற்கு 
அனுமதிப்பத்திரமில்லாதவர்கள் நுழைய கூடாதென நேற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு 
சென்றனர். பல்வேறு வழிகளிலும் இராணுவம் வழிமறித்த போதும் மக்கள் தொடர்ந்தும் ஆலயத்திற்கு சென்றபடியிருந்தனர்.நேற்று ஆலயத்திற்கு சென்ற காவடி வழிமறிக்கப்பட்டு, 
திருப்பியனுப்பப்பட்டிருந்தது
.பக்தர்கள் தொடர்ந்தும் ஆலயத்திற்கு சென்ற போதும், ஆலய வழிபாட்டிற்கு அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்திருந்தனர்.எனினும், இன்று காலையில் தூர இடங்களிலிருந்து ஆலயத்திற்கு யாத்திரை வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு 
அனுமதிக்கப்பட்டனர். பெருமளவான மக்கள் பகல் பொழுதில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். ஆலய வளாகத்தில் ஒலிபெருக்கியில் விடுக்கப்படும் அறிவித்தலின்படி, 
மக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனினும், 10 பேர் கொண்ட குழுக்களாகவே அனுமதிக்கப்படவுள்ளனர் 
குறிப்பிட்ட நேர அளவில் 10 பேர் கொண்ட குழுக்களாக வழிபாட்டிற்கு நுழைய 
அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வழிபாட்டை முடித்துக் கொண்டு உடனடியாக ஆலயத்திற்குள்ளிருந்து வெளியேறி 
விட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆலய சூழலில் பெருமளவு இராணுவம், இராணுவ பொலிசார், பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, இன்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.