சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 18.07.20

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா18-07-2020..இன்று 8-45.மணிக்கு  பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின் ( முத்தேர்பவனி) தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், கற்பூரச்சட்டி .பால்குடம் .எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு 
நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் மூன்றாவது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>













0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.