ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது ஏன் தெரியுமா

ஸ்ரீ ராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன்  பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு 
சக்தி படைத்தவர்.
அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார். அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப்  பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில்  வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள்.
“இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்” என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற  வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.
திருமணங்களில் வெற்றிலை தாம்பபூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும்  என்பதற்காகத் தான்.
பலன்கள்:
வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசிர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லக்ஷ்மிகரமாக  நிறைவேறும் என்பது ஐதீகம்.
வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வணங்கினால் நமக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வெற்றிலை மாலை சாற்றுவதால் சுபநிகழ்வுகளின் தடை  நீங்கும். தொழிலில் 
வெற்றி கிடைக்கும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.