நாட்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் பிதிர் கடன்களை நிறைவு செய்ய அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலோரங்களை அண்டிய பகுதிகளில் பிதிர் கடன்களை நிறைவு செய்வதற்கு இலங்கையில் இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உள்ளதால் இலங்கையிலும் மக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடித்த வண்ணம் தமது நாளாந்த நடவடிக்கைகளை
 முன்னெடுத்து வருகின்றனர்.இந்த 
நிலையில் குளங்கள் மற்றும் கடலோரங்களில் பிதிர் கடனை செலுத்துவதற்கு சுகாதாரத் தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.இதனையடுத்து எதிர்வரும் 20ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் பிதிர் கடனை
 நிறைவேற்றல் தொடர்பில் சிக்கல் நிலை காணப்பட்டது.இது தொடர்பில் அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த 
விடயத்தை நேற்றைய தினம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.இதன் பிரகாரம் குளங்கள் குறுகிய பரப்பை
 கொண்டுள்ளதால் கொரோனா தொற்று 
பரவும் சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.
எனவே, அதற்கு பதிலாக கடலோரங்களில் அத்தகைய கிரிகைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.