சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்.சிவனின் இடது பாகத்தை பெற சக்தி மேற்கொண்ட விரதம்கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி. தேவியோடு வீற்றிருந்தார்.பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் .மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார்.ஆனால் , பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட .அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen