ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி தேவை என்றால், கட்டாயம் அவர்களுக்குள் எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை சிந்தனையும், எதிர்மறை எண்ணங்களும், இருக்கவே கூடாது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தாலும், எதிர்மறையாக, அதாவது
நெகட்டிவாக சிந்திக்கும் எண்ணம் எவரொருவர் மனதில் இருக்கின்றதோ, அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி கட்டாயம் இருக்காது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு
சில பேர் மன அழுத்தத்தோடு இருப்பார்கள்.எதை செய்தாலும், ‘அது தவறாக நடந்து விடுமோ’ ‘அவர்கள் நம்மை பற்றி தவறாக சிந்தித்துப்பார்களோ’ ‘இப்படி செய்தால் கஷ்டம் வந்துவிடுமோ’ ‘அப்படி
செய்தால் கஷ்டம் வந்து விடுமோ’ என்று இப்படியாக எதிர்மறையாக பேசிக்கொண்டு இருப்பவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு சுலபமான சக்திவாய்ந்த பரிகாரம் தான் இது.
முதலில் நமக்கு எல்லாமே நன்மையாக நடக்கும். எல்லோரும் நன்றாக இருப்போம். என்று நேர்மறையாக சிந்திக்க பழகிக் கொண்டாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் பாதி பிரச்சனை
தீர்ந்து விடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாமா?காலையில் எழுந்து, சுத்தபத்தமாக குளித்து
முடித்துவிட்டு, கண்களை மூடி இந்த தியானத்தை மட்டும் செய்யுங்கள். நீங்கள் முதலில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு கண்ணாடி
டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். உங்களை சுச்சி நறுமணமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஊதுவத்தி
அல்லது கம்ப்யூட்டர் சாம்பிராணி போட்டுக்கொள்ளலாம். முடிந்தால் நெருப்பு மூட்டி சாம்பிராணி புகை கூட போட்டு விடுங்கள்.இன்னும் நல்லது. தயாராக இருக்கும் கண்ணாடி டம்ளருக்கு முன்பாக
நீங்கள் சம்மணம் போட்டு, முதுகுத்தண்டு நேர் பக்கமாக இருக்கும்படி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் மந்திரங்கள் தெரிந்தால், உச்சரிக்கலாம். தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை ‘
ஓம் நமசிவாய’ சொல்லலாம். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம். இல்ல உங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். எதுவுமே இல்லை என்றாலும் உங்களுடைய மனதை அமைதியாக வைத்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்யுங்கள்.
உங்க மனசுல இருக்கிற கெட்ட சக்தி, கெட்ட எண்ணம், எதிர்மறை ஆற்றல், அழுக்கு, பிடிவாதம், அழுத்தம், இப்படிப்பட்ட உங்களுக்கு கெடுதல் தரக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அவை அனைத்தையும் அந்த எலுமிச்சைபழம் ஈர்த்துக் கொள்ளும். உங்களுடைய மனது நிம்மதி அடையும். தினம்தோறும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து
செய்து வந்தால், உங்களுடைய நடவடிக்கைகளில், உங்களுடைய எண்ணத்தில் உங்களாலேயே மாற்றத்தை உணர முடியும்.நேர்மறை எண்ணத்தோடு, செயல்பட வேண்டும். நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்க
வேண்டுமென்றால், அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு, ஒருவரைப் பற்றிப் பின்னால் புறம் பேசும் பழக்கத்தை தவிர்த்துவிட்டு, அடுத்தவர்களைப் பற்றி
சிந்திக்காமல், உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்துக் கொண்டு, கூடவே இந்த தியானத்தையும் செய்துகொண்டு
உங்களது வாழ்க்கையை வாழ பழகி பாருங்கள்! நிம்மதியான வாழ்க்கை உங்கள் கையில் தானாக வந்து சேரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen