ஒரு சில அடியவர்களுடன் தைப்பொங்கல் தினமான
14-01-2021.அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக வற்றாப்பளை
கண்ணகை அம்மன் ஆலயத்தில் 14-01-21.அன்று காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன.
இந்தப் பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத்திரம் கலந்துகொண்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மற்றும் 50 வரையான இராணுவத்தினர் இந்த
பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்ததாக
தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen