யாழ் கீரிமலை நகுலகிரி நாதனின் வருடாந்த திருவிழா கொடியேற்றம் 26.03.2021 ஆரம்பம்

பஞ்சஈஸ்சரங்களில் ஒன்றான வரலாற்றுச்சிறப்புமிக்க நகுலகிரி_நாதனுக்கு 26.03.2021 வெள்ளிக்கிழமை அன்று  கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் விசேட திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித்திருநாட்டின் வடபால்_கீரிமலை பதியிலே அமர்ந்து அருள்பாலித்துவரும் நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 26.03.2021 வெள்ளிக்கிழமை அன்று 
 காலை 11.15 முதல் 12 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் துவஜாரோகணத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 தினங்கள் மகோற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது
.இதில், 10.04.2021 புதன் கிழமை இரவு பெரிய 
சப்பறத்திருவிழாவும், 11.04.2021 வியாழக்கிழமை இரதோற்சவமும் 12.04.2021 தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.இம் மகோற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்த அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை 
பின்பற்றி உரிய முறையில் ஆலயத்திற்கு 
வருகை தந்து எம்பெருமானின் இஷ்டசித்திகளை பெறுமாறு கேட்டுநிற்கின்றோம்.
மகா சிவராத்திரி பெருவிழா பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
மகோற்சவம் பற்றிய மேலதிக 
விபரங்களிற்கு 0776366338.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.