நாம் நவக்கிரகங்களை இப்படி வழிபட்டால் செல்வம் பெருகுமாம்

கோயில்களீல் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கும் பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி
 வருகிறது.
வலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது.
1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
2. சந்திரனை வணங்கினால் புகழ் கிடக்கும்.
3. செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
4. புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
5. குருபகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
6. சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
7. சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.
8. ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை
 கிடைக்கும்.
9. கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.