நாம் யாரிடமும் ஏமாறாமல் இருக்க, நம்மை சுற்றியிருக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ள இந்த ஒரு பொருள் தெய்வீக மூலிகை பொருளாக கருதப்படுகிறது. விபூதி மற்றும் குங்குமத்திற்கு இணையாக இருக்கும் இந்த பொருள் எங்கு
கிடைக்கும்? இதை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் ஆன்மீக தகவல்களாக இந்த பதிவின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.
தெய்வீக மூலிகை பொருட்களில் ஒன்றாக இருக்கும் இந்த பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் கிடைக்கப் பெறுகின்றன. இதில் இருக்கும் தெய்வீக வாசம் இறையாற்றலை நம்மை உணர வைக்கும் சக்தி கொண்டுள்ளது. இதை தினமும் முறையாக நெற்றியில் இட்டுக் கொண்டால் நமக்கு வரக் கூடிய எந்த ஒரு ஆபத்தும் நம்மை நெருங்காது. பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இந்நாட்டில் ஏராளம் உண்டு. உங்களுக்கு நேரம் சரி இல்லாத பொழுது, இது போலெல்லாம் நடக்க வாய்ப்புகள் உண்டு.
நீங்கள் என்ன தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் ஏமாற்றம் நிச்சயம் அனுபவிக்க வேண்டியிருக்கும். கூடவே இருந்து கொண்டு துரோகம் செய்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். இது போல பணத்தை கொடுத்து ஏமாறுவது,
சொத்தை கொடுத்து ஏமாறுவது, அன்பைக் கொடுத்து
ஏமாறுவது என்று உங்களை சுற்றி ஒரு ஏமாற்றும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பார்கள். இத்தகையவர்களிடமிருந்து விலகி செல்லவும், இவர்களுடைய சூழ்ச்சி வலையில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், நம்முடைய நேரத்தை சரியானதாக மாற்றி காண்பிக்கவும் இந்த ஒரு பொருளை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
இதற்குப் பெயர் ‘கோரோசனை’ என்று கூறுவார்கள். பசு மாட்டின் பித்தப் பையில் இருந்து எடுக்கப்படும் பித்தம் தான் கோரோசனை ஆகும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய இந்த
கோரோசனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை கோவில்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலமும் உங்களுக்கு நிறையவே புண்ணிய பலன்கள் வந்து சேரும். கோரோசனை தானம் செய்வது குல விருத்திக்கு வழி வகுக்கும். அபிஷேகப் பொருள்களில் ஒன்றாக இருக்கும் இந்த கோரோசனை தெய்வீக மூலிகை ஆகும். இதை வலது கை மோதிர விரலால் தொட்டு கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் எழுந்ததும் உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பூஜை அறைக்கு சென்று நீங்கள் வழிபடும் தெய்வத்தின் முன்பு இந்த கோரோசனை கொண்டு போய் வையுங்கள். பின்னர் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு வலது கை மோதிர விரலால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்ததும் அதில் நீங்கள் விருப்பப்பட்ட கடவுளின் திரு உருவத்தை கொண்டு வாருங்கள்.
கோரோசனையில் அந்த திருவுருவம் உங்களுக்கு தெரிந்த பிறகு அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க அதுக்கு பிறகு நீங்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும். உங்களுடைய நேர்மறையான எண்ணங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தோல்விகள்,
அவமானங்கள் உங்களை நெருங்காது. எதிலும் வெற்றியோடு செயல்படக் கூடிய, சுறுசுறுப்போடு செயல்பட கூடிய தைரியத்தை
கொடுக்கும் இந்த கோரோசனை வீட்டில் இருப்பது சுபீட்சத்தை கொடுக்கும். கோரோசனையின் வாசம் தெய்வத்திற்கு பிடித்த ஒரு மூலிகை வாசம் ஆகும். இதை நாம் நெற்றியில் இட்டுக் கொள்வதால் நமக்கு
வெற்றி மேல் வெற்றி குவியும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen