வீட்டில் பெண்கள் செய்யும் சில செயல்கள் லட்சுமி கடாட்சத்தினை கண்கூடாக காண்பதுடன் வீட்டில் எப்போதும் லெட்சுமி தேவி குடிகொள்வார்
என்பது ஐதீகம்.
அதிலும் பெண்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை செய்யும் ஒவ்வொரு செயலும் வீட்டில் வறுமையை போக்கி செல்வத்தினை அதிகரிக்கும்.
அவ்வாறு வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய சில விடயத்தினையும், செய்யக்கூடாத விடயம் என்ன? என்பதையும் இந்த
பதிவில் காணலாம்.
காலை சூரியன் உதயமாவதற்கு முன்பு வீட்டு வாசலை சுத்தப்படுத்தி கோலம் போட்டு வைத்தால் லட்சுதி தேவி வருகை புரிவாள். கோலம் போடுவதற்கு முன்பு மகாலட்சுமியே வருக என்று மூன்று முறை
உச்சரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி காலையில் கதவைத் திறக்கும் போது வலது கையினால் திறக்க வேண்டும்.ட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்கும்
பழக்கம் உங்களிடம் இருந்தால், லட்சுமி தேவி எப்பொழுதும் உங்கள் வீட்டில் குடிகொண்டு இருக்கின்றாராம். மேலும் இத்துடன் சட்டை துணியும், ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
வீட்டிற்கு வரும் நபர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதையும், அவர்களை வழியனுப்பும் போது மங்கலப் பொருட்கள் ஏதாவது கொடுத்து அனுப்பினால் லெட்சுமியின் ஆசீர்வாதம் வீட்டில் எப்போதும் நிலைத்திருக்கும்.
வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளித்து காலை, மாலை வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
வெள்ளிக் கிழமைகளில் செய்யக்கூடாதவை
யாருக்கும் பணம், தயிர், பால், சமையல் காய்கறி எதுவும் கடனாகவே, தானமாகவே கொடுக்கக்கூடாது.
குழம்பு மசாலா தூள் அரைப்பதற்கு அன்றைய தினம் அடுப்பில், வத்தல், அரிசி, எதையும் வறுக்கவும், அரியினை புடைக்கவும் கூடாது.
விளக்கு வைத்த பின்பு வெளியே செல்வது, குப்பை கொட்டுவது, தலை வாருவது, பேன் பார்ப்பது இவற்றினை
செய்யவே கூடாதாம்.
மேலும் வெள்ளிக்கிழமையில் பாலை பொங்கவிடாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
சுமங்கலி பெண்கள் மற்றவர்களுக்கு குங்குமம் கொடுக்கும் முன்பு தான் முதலில் வைத்த பின்பே கொடுக்க வேண்டும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen