உங்கள் அனை வருக்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

ஓளி வெள்ளம் அணியாய் அலங்கரிக்க
களி கொள்ளும் மனமதைக் காண
வளியெங்கும் நத்தார் பலகார சுகந்தம்
எளியவர் யேசுபாலன் அவதரித்த நன்நாள்.
உறவுள்ளோர் கலந்து றவாடிக் களிக்க
உறவற்றோர் வேதனையில் 
துவண்டு வருந்த
உள்ளவனும் ஏழையுமி ணைந்து மகிழ்ந்து
உறவாடும் நத்தார் இனிய வாழ்த்துகள்!)
இனிய நத்தார் வாழ்த்து.
நத்தார் பெருநாள் ஆனந்தம் குவிய
சித்தத்தில் அத்தர் வாசனை கவிய
எத்தர்களும் மொத்தமாய் மகிழ்ந்து குவிய
காத்திருந்த காலம் வேகமாய் வந்தது.
கடை வீதி கலகலக்கும் 
கொள்வனவு
மடை திரளும் பரிசுப் பொதிகளும்
படை திரளும் இனிப்புப் பண்டங்களும்
இடைவெளி யில்லா மக்கள் 
நெருக்கம்.
வெள்ளை டெனிஸ் நத்தார் நம்பிக்கை
கொள்ளை போனது பெரும் அவநம்பிக்கை
பிள்ளை மகிழ்வு திருநாள் மகிழ்வு.
கிள்ளையாய்ப் பொழியுமின்ப 
எமது இணையங்கள் நத்தார் வாழ்த்து.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.