உங்கள் வீட்டில் மயிலிறகு வைத்திருப்பதனால் ஏற்படும் மாற்றங்கள்.

நாம் சிறு வயதில் மயிலிறகு குட்டி போடும் என்று புத்தகக்கட்டுக்குள் வைத்த ஞாபகம் உண்டோ இல்லையோ இந்த மயில்  முருகக் கடவுளின்  வாகனம் மயிலின் செட்டையாகையால்,  அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமோ?...  இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து 
கொள்ளுங்கள்.
வாஸ்து தோஷம் உள்ளவர்கள் வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க  மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும். அலமாரி நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.
எதிர்மறை ஆற்றல்கள் நீங்க மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
அலுவலக இடம் ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம். பூச்சிகள் வராது மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் 
தடுக்கலாம்.
அன்யோன்யம் மற்றும் புரிதல் திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் 
அதிகரிக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.