நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், முதலில் நாம் பெறவேண்டிய செல்வம் ஆரோக்கிய செல்வம். ஆரோக்கியமாக இருந்தால்
தான் ஓடி ஓடி உழைத்து நிறைய பணத்தை சம்பாதிக்க
முடியும். ஆகவே முதலில் ஆரோக்கிய செல்வதை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம்
பெறவேண்டிய செல்வம் மன அமைதி, மன அமைதி இருந்தால்தான் குழப்பம் இல்லாமல் செய்யும் தொழிலில், செய்யும்
வேலையில் வெற்றி
காண முடியும். மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். அப்போதுதான் லாபத்தை அதிகமாக பெற முடியும். ஆரோக்கியம் இல்லாமல் மன அமைதியும் இல்லாமல், நீங்கள் செய்யக்கூடிய வேலை நிச்சயம் வெற்றியை கொடுக்காது. பணத்தையும் கொடுக்காது.
ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வேண்டும். ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியத்தை
தரக்கூடிய மன அமைதியை தரக்கூடிய ஆசனம், பத்மாசனம். அதை எப்படி செய்வது என்பதை பற்றியும், அதற்கு அடுத்து செல்வ வளங்களை கொடுக்கும் குபேர முத்திரை, அதை எப்படி முறையாக செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து
கொள்ள போகின்றோம்.
பத்மாசனம் செய்வது எப்படி? இது எளிமையான ஆசனம் தான். தரையில் ஒரு விரிப்பு விரித்து, அதன் மேலே முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து, வலது பாதத்தை இடது தொடையின் மீதும், இடது பாதத்தை வலது தொடையின் மீதும் வைத்து, உங்களுடைய விரல்களில், ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் ஒன்றாக சேர்த்து, மீதி 3 விரல்களை விரித்தபடி வைக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். முதலில் இந்த பத்மாசனத்தில் 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை அமர வேண்டும். அப்போது மன அழுத்தம் நீங்கும். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் சீராக செல்லும். உடல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய தினமும் இந்த பத்மாசனத்தை செய்யுங்கள்.
குபேர முத்திரை பிடிப்பது எப்படி? பத்மாசனத்திற்காக கால்களை தூக்கி தொடை மேலே வைத்திருப்பீர்கள் அல்லவா. அதை மெதுவாக
கீழே இறக்கி சம்மனம் போட்டு அமர்ந்து
கொள்ளுங்கள்.
அடுத்து கட்டைவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல்,
மூன்றையும் ஒன்றாக சேர்த்தபடி தொடையின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று விரல்களுக்கு
நடுவே ஒரே
ஒரு நெல்மணியை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு
ஐந்து நிமிடங்கள் குபேர முத்திரையில் இருந்தபடி
உங்களுடைய பண பிரச்சனை தீர வேண்டும் என்று
வேண்டிக் கொள்ள வேண்டும். நெல்மணியை கையில் வைத்துக்கொண்டு குபேர முத்திரையோடு நீங்கள் எந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக வேண்டுதல் வைத்தாலும் அது உடனே
சரியாகிவிடும்.
தொழிலில் நஷ்டம், வருமானம் சரியாக வரவில்லை, கடன் பிரச்சனை, சம்பளப் பணம் உயர வேண்டும், என்று எந்த பண பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்ய இந்த முத்திரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தினமும் 10 நிமிடம் இந்த குபேர முத்திரையை
பிடித்து படி மனதை ஒருநிலைப்படுத்தி தியானம்
செய்யுங்கள்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பத்மாசனம். அடுத்து செய்ய வேண்டியது குபேர முத்திரை. குபேர முத்திரை பிடிக்கும் போது நெல்மணியை கையில் வைத்துக் கொள்வது அதிசிறப்பு வாய்ந்த அற்புதமான
பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க
ஒரு விஷயம். இதையும் படிக்கலாமே: அடுத்த மாதம் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இதை செய்து பாருங்கள். அதற்கு
அடுத்த மாத
சம்பளம் அப்படியே இரட்டிப்பாகும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த முத்திரை பரிகாரங்களை செய்து பலன்
பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு
செய்து கொள்வோம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen