முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள திரையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் பூசை, பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு
நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழா தேர் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மற்ற கால பூஜைகளும் நடைபெற்று தேர் ஊர்வலம்
நடந்து வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வடம்
பிடித்து தேர் இழுத்தனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen