நாம் காலையில் எழுந்ததும் முக்கியமாக சிலவற்றில் மட்டுமே நாம் கண்கள் விழிப்பது உண்டு. நாம் பார்க்கும் இந்தப் பொருட்களைக் கொண்டே, நம்முடைய அந்த நாள் பொழுது அமையும் என்று சாஸ்திரங்கள்
குறிப்பிடுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும்
முதல் வேலையாக
நாம் இந்த பொருட்களை பார்த்து கண் விழிக்க நேர்ந்தால் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து நம்மை சேருமாம்! அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்
எந்த ஒரு பொருளுக்கும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை உண்டு. வீட்டில் முச்சடிகள் இருந்தால் நீங்கள் காலையில் எழுந்ததும் முதல் முதலில் மூட்செடிகளை பார்த்து
கண் விழிக்க நேர்ந்தால், அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு பலரும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். பிரச்சனைகளும் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும் என்று சாஸ்திரங்கள்
கூறுகிறது.
இப்படி ஒவ்வொரு பொருட்களின் அதிர்வலைகளும் நம்மை பின் தொடர்வதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் பணக் குவியலை பார்த்து விழிக்க நேர்ந்தால், பணம்
பல வழிகளில் இருந்தும் நம்மை எப்படியாவது வந்து
சேருமாம். வராத பணம் வசூல் ஆகலாம், வரவேண்டிய
பணம் வந்து சேரலாம், புதிதாக பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை பெறலாம். இப்படி ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு பணம் ஆனது புழங்கும் என்று சாஸ்திரங்கள்
இப்படி ஒவ்வொரு பொருட்களின் அதிர்வலைகளும் நம்மை பின் தொடர்வதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் பணக் குவியலை பார்த்து விழிக்க
நேர்ந்தால், பணம்
பல வழிகளில் இருந்தும் நம்மை எப்படியாவது வந்து சேருமாம். வராத பணம் வசூல் ஆகலாம், வரவேண்டிய பணம் வந்து சேரலாம், புதிதாக பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை பெறலாம். இப்படி ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு பணம் ஆனது புழங்கும் என்று சாஸ்திரங்கள்
குறிப்பிடுகிறது.
அது போல காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தங்க குவியல், பொற்பானை, தங்க நாணயங்கள், தங்க ஆபரணங்கள் போன்ற தங்கம் சார்ந்த பொருட்களில் விழிக்க நேர்ந்தால் பணம் பல வழிகளில்
இருந்தும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள்
கூறுகிறது. தங்க குவியலுக்கெல்லாம்
நாம் எங்கே
செல்வது? என்று யோசிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது படங்கள். சில வகையான படங்களுக்கு அன்றைய நாளை புத்துணர்ச்சியாக மாற்றக்கூடிய அற்புத மாயங்கள் நிறைந்த
தன்மை உண்டு.
குதிரைகள் ஓடுகின்ற படத்தை வீட்டில் இதற்காகத்தான் மாட்டி வைக்கின்றனர். இதனால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அது போல புத்தர் சிரிக்கும் சிலையை பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி நம் முகத்தில் தாண்டவம் ஆடும்
என்று நம்பிக்கை உண்டு. அதே போல தங்க குவியல்
, பணம், தங்கம் சார்ந்த பொருட்கள், பொக்கிஷங்கள்,
புதையல்கள் போன்றவற்றை படங்களாக நீங்கள்
படுக்கை அறையில்
ஒட்டி வைக்கலாம். இதனை பார்த்து கண்விழிக்கும் பொழுது உங்களுடைய நாள் பொழுது அதிர்ஷ்டகரமானதாகவும், பணவரத்துக்கு
குறைவில்லாமலும் இருக்குமாம். இதையும் படிக்கலாமே: மன வேதனை, உடல் வேதனையை போக்கும் முருகன் மந்திரம்! தினமும் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானே நேரில் வந்து
அருள் தருவார்.
எப்பொழுதும் காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்த்து கண் விழிக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர். உள்ளங்கையில் மகாலட்சுமி வசிப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் தான் நம்முடைய உள்ளங்கையை நாம் பார்க்கிறோம். இதனால்
மகாலட்சுமியை தரிசனம் செய்ததாக ஐதீகம் ஆகிறது, எனவே
அன்றைய நாள்
பொழுதில் நமக்கு மகாலட்சுமி உடைய அருள் இருக்கும்
என்றும், வறுமை இல்லாமல் சுபிட்சமும், செல்வ வளமும் இருக்கும் என்றும், பணத்திற்காக அலைய வேண்டிய அவசியம் இருக்காது
என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் உள்ளங்கையை தரிசனம் செய்கின்றனர். அது போல இதுபோன்ற சுபீட்சமான படங்களையும்,
அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்களையும் பார்த்து
கண் விழிக்க
நேர்ந்தாலும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது, வருமானம் அதிகரிக்கும், நினைத்தது நடக்கும், தொட்ட காரியம்
ஜெயமாகும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen