இப்படி சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட்டால் நம் இஷ்டம் நிறைவேறும்

சிவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று சொல்லக்கேட்டிருப்பீர்கள். அதன் படி சிவபெருமானை சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன.
 சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. அவர் நினைத்தால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் சிவபெருமானை சிவாலய்த்தில் வழிபடும் முறை எப்படி அமைந்தால் சிறப்பு எனப்பார்க்கலாம்.
 சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ 
வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் 
நுழைய வேண்டும்.
கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் முன்னோர்கள்.
சிவாலயங்களில் வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும். மேலும் இருகரம் குவித்து தலைமேல் வைத்து வணங்குவது நல்லது.
நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால், செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில்
 கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை 
வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க 
செல்ல வேண்டும்.
சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் 
போட வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை 
வழிபட வேண்டும்.
கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று “வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி 
வெளியே வர வேண்டும்.
கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், 
தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு 
வெளியில் வரவேண்டும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.