உங்கள் திருமணத் தடை மற்றும் குழந்தை செல்வம் தரும் சரபேஸ்வரர்

கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது
 சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான 
சித்தலிங்கேஸ்வரர் கோவில்.
சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது. உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான்
ஸ்ரீ சித்தர் பீடம் பிரம்மானந்த மடம் அறக்கட்டளையினர் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். தினமும் சாமிக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
ஞாயிறு மாலை வேள்வி பூஜையும், இரவு சிவசக்தி யாக பூஜையும் நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்போருக்கு திருமண தடை நீங்கும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.
இங்குள்ள அம்மன் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது. கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் இந்த கோவிலில் நவகோள்களும் ஒரே நேர் கோட்டில் உள்ளது தனிச்சிறப்பு என்று கூறுகிறார்கள்.
சித்தலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சபூத தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகிலம் போற்றும் சரபேஸ்வரருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சரபேஸ்வரர் ஐம்பொன் சிலையில் அழகு மிளிர காட்சி தருகிறார்.
  என்பதாகும்







 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.