சிறுப்பிட்டி நகர் இரு பெரியவர்கள் {கவுரவிப்பு }

04.09.2012.BYrajah.சிறுப்பிட்டி நகர் தந்த இரு பெரியவர்களை மதிப்பளிக்க முன் வந்த சிறுப்பிட்டி மக்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்திற்கும் மற்றும் இவர்களை மதிக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் நவற்கிரிஇணையங்கள் சார்பாகமிகுந்த நன்றியும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக
 
சின்னையா வைத்திலிங்கம்
தம்பு இராமநாதன்
வாழ்க வாழ்வீர்பல்லாண்டு
 

ஓய்வு பெறும் வயது 67 ஆக உயர்வு

04.09.2012.BY.rajah.சுவிட்சர்லாந்தில் பேசெல்லில் உள்ள பொருளியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வில் ஓய்வு பெறும் வயதை 67ஆக உயர்த்த வேண்டும் என்பதை பொது மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 1942ம் ஆண்டு முதல் 1973 ஆண்டு வரை அதிகரித்த குழந்தை பிறப்பும், வாழ்நாள் அதிகரிப்பும், புலம்பெயர்வும், குழந்தை பிறப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் சேர்ந்து 2010 முதல் 2060 வரையிலான ஓய்வூதிய நிதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015 முதல் 2018க்குள், ஓய்வூதியம் வழங்க அதிக நிதி தேவைப்படுவதால் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி, பணியாளர் பங்களிப்பு மூலமாகவே இந் நிதி திரட்டப்படும்.
அரசு ஓய்வூதிய நிதியைப் பெருக்க வேறு பல வழிமுறைகளையும் ஆலோசித்து வருகிறது. ஓய்வூதிய வயதை உயர்த்துதல், சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தல், உடனடியாக கூடுதல் வரி விதித்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது 2019ம் ஆண்டில் 66 என்றும் 2050ம் ஆண்டில் 70 என்றும் உயர்த்தப்படும்

இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது!



 

04.09.2012.BY.rajah.டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் அங்கு நங்கூரம் இடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கொடியுடனான இந்த கப்பல் தான்சானியாவைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத நிலையிலேயே கப்பலை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், எம்.வி. லங்கா மஹாப்பொல என்ற இந்த கப்பலில் பணியாற்றிய மாலுமிகள் தமக்கான 85 ஆயிரம் அமெரிக்க டொலர் வேதனத்தை வழங்க கப்பல் நிறுவனம் தவறிவிட்டதாக முறையிட்டனர்.

இவர்களது முறைப்பாடு குறித்த விசாரணையின் பின்னர், இவர்களுக்கான வேதனம் வழங்கப்பட்டு, அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிதாக பணிக்கமர்த்தப்பட்ட கப்பல் பணியாளர்கள் கப்பலில் பணியாற்றுவதற்கான உரிய வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபை, கப்பல் மாலுமிகளுக்கு சர்வதேச தரத்துடனான வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே கப்பல் தொடர்ந்தும் டுபாய் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

வாழைச்சேனை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி அம்மன் சிலை கொள்ளை

02.09.2012.BY.rajah.
 
வாழைச்சேனை மீறாவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் எழுந்தருளி ஜம்பொன் உருவச் சிலையானது கொள்ளையர்களினால் களவாடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவுவேளை இடம்பெற்றுள்ளது.
38 கிலோ கிறாம் எடையுடைய ஜம்பொன் கண்ணகி அம்மன் எழுந்தருளி உருவச் சிலை, குத்து விளக்குகள் மற்றும் ஆலய பூசைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக ஆலய குருக்கள் சிவஸ்ரீசெல்வநாயகம் தெரிவித்தார்.
அம்மனின் தங்க ஆபரணங்கள் வங்கியில் பாதுகாப்பாக வைத்ததினால் அவை அதிர்ஸ்ட வசமாக பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஆலய உற்சவம் இடம்பெற்று ஒருவாரகாலம் கடந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாலயமானது வாழைச்சேனையில் முஸ்லிம், தமிழ் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

நாகதம்பிரான் ஆலயத் திருவிழா 12 வருடங்களின் பின் இம்முறை

02.09.2012.BY.rajah.
சரித்திரப்புகழ் பெற்ற வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருந்திருவிழா 12வருடகால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் இந்தக் கோவில் பெருந் திருவிழாவில் ஒன்று கப்பல் திருவிழாவாகும்.
போர்த்துக்கேயர் வந்து இறங்கியதைப் பிரதிபலிக்கும் இந்தத் திருவிழா சிறப்பு மிக்கதாகும். இந்தத் திருவிழா எதிர் வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த கால போர் காரணமாக 2000ஆம் ஆண்டு இந்தப் பகுதி மக்கள் இடம் பெயர்ந்ததுடன் இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. இதனால் ஆலயத் திருவிழாவும் தடைப்பட்டிருந்தது.
தற்போது போர் நிறைவடைந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோவிலுக்குச் செல்லவும், பூசை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இக் குறுகிய காலத்தில் கோவில் புனரமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.
தற்போது நாகர் கோவில் பகுதியில் சில கிராமசேவையாளர் பிரிவுகளில் மீள்குடியமர்வும் நடைபெற்றுள்ள நிலையில் இக் கோயில் வருடாந்தத் திருவிழா இம்முறை நடைபெறவுள்ளது.
பெருந்திருவிழாவை நடத்துவது தொடர்பாக நாகதம்பிரான் ஆலயபரிபாலனசபை அண்மையில் ஒன்று கூடி இதற்கான தீர்மானமும் எடுத்துள்ளது

மொட்டணம்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

01.09.2012.BY.rajah.
மொட்டணம்பட்டி காளியம்மன் கும்பாபிஷேகம் நாளை (செப்.2) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.பல ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேக விழா துவக்க நிகழ்ச்சியாக நேற்று மாலை பூஜை துவங்கியது. இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வருண வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், முளைபாலிகை இடுதல், கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு காளியம்மன், பகவதியம்மன், திருக்குடத்துக்குள் எழுருந்தருள செய்தல், வேள்விச் சாலையில் நுழைதல் முதற்கால யாக வேள்விகள் துவக்கம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புதன் ஹோரையில் எந்திர சக்தி நவரத்ன சக்திகளை நிலை நிறுத்துதல், எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறைய அளித்தல், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு காளியம்மன், பகவதியம்மன் இரண்டாம் கால யாகவேள்வி துவக்குகிறது. காலை 7 மணிக்கு தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதலும்நடக்கிறது.
* காலை 8மணிக்கு கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி வழிபாடு நடக்கிறது.
கும்பாபிஷேகம்: காலை 8.30 மணி முதல் 9மணிக்குள் புனித நீர் குடயாத்திரை அனுமதி பெறுதல், கன்னிகா லக்கினத்தில் காளியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களின் விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், அலங்காரம் மலர்களால் போற்றி வழிபாடு பிரசாதம் வழங்கலும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அன்னதானமும், இரவு 10 மணிக்கு வள்ளி திருமண நாடகமும் நடக்கிறது. ஆகம முறைப்படி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், தலைமை அர்ச்சகர் ஜனஹர்(எ) சதாசிவ குருக்கள் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் துரைராஜ், செலாளர் வேல்முருகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் செல்வராஜ், பகவாணிதாஸ், பாண்டியராஜன்,ஸ்டார் நற்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்

ஆவணி பவுர்ணமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

01.09.2012.BY.rajah.திருவண்ணாமலை: ஆவணி பவுர்ணமி விழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

அல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

01.09.2012.BY.rajah.உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்திற்காக பால்குடம், தேங்காய்பழ தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து கிராமத்தினர் வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம்!

01.09.2012.BY.rajah.மானாமதுரை: மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இப்போதே விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வருடம் புதுமையாக குடை விநாயகர்,யாத்திரை விநாயகர், சிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.ரூபாய் ஐந்திலிருந்து 350 ரூபாய் வரையிலான சிலைகளை செய்து வருகின்றனர். கதிரேசன் என்பவர் கூறியதாவது: இந்த வருடம் புதுமையாக சிறிய அளவிலான குடை விநாயகர்,யாத்திரை விநாயகர், ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த வருடம் ரூபாய் 10க்கு விற்ற விநாயகர் சிலைகள் இந்த வருடம் ரூபாய் 20க்கு விற்பனையாகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர்,என்றார்

Powered by Blogger.